செவ்வாய், 13 ஆகஸ்ட், 2013

“ழகர ஞாயிறு” அ. தேவநாதப் பாவாணர் அவர்களின் தமிழ் ழ கரப்பணிகள்

·         தமிழ் ழகரப் பணிமன்றத்தின் நிறுவனரும், மாநிலத் தலைவருமான தமிழ் ஆய்வறிஞர் “ழகர ஞாயிறு” அ. தேவநாதப் பாவாணர் அவர்களது தமிழ்ப் பணியினை அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் வத்தலக்குண்டு நகரில் இயங்கிவருகின்ற  அய்யன் திருவள்ளுவர் இலக்கியப் பேரவையினர் துண்டறிக்கை அச்சிட்டு வெளியிட்டுள்ளனர். அதனைப் படித்து நீங்களும் பயனடியுங்கள்.    – அந்தமான் அருண்.
அய்யன் திருவள்ளுவர் இலக்கியப் பேரவை, வத்தலகுண்டு.
பெருமதிப்பிற்குறிய தமிழ்ச்சான்றோர்களே,அறிஞர்களே!
அனைவருக்கும் வணக்கம்,
சென்னை – 6, ஆயிரம் விளக்கு, தமிழ் ழகரப் பணிமன்றத்தின் நிறுவனரும், மாநிலத் தலைவருமான தமிழ் ஆய்வறிஞராகத் திகழும் “ழகர ஞாயிறு” அ. தேவநாதப் பாவாணர் அவர்களது சில அறிவுபூர்வ ஆய்வு கருத்துக்கள் கொண்ட பாடல்களையும், அதில் புதைந்துகிடக்கும் தேவையான பல உண்மைகளையும் தமிழ் அறிஞர் உலகம் அறிய வேண்டுமென்பதற்காக சிலவற்றைத் தேர்வு செய்து தொகுத்து அளிப்பதில் எமது இலக்கியப் பேரவை மகிழ்ச்சி கொள்கிறது.
      அன்னாரது தமிழாய்வறிவைக் கண்டு மகிழ்ந்து “வாழும் நக்கீரர்” என்ற பொருத்தமான விருதினை 29.04.2012 அன்று வதிலைப் பேருரில் நடந்த விழாவில் அளித்து பாராட்டியுள்ளோம். தமிழ் நாட்டுக்கும், மக்களுக்கும் தேவைப்படுவனவற்றை சற்றும் தயங்காது எடுத்துரைக்கும் மனந்தளராத பாங்கு, போற்றத்தக்கது என்பதை அனைவரும் அறியவேண்டிய ஒன்றாகும். இவரது ழகரப் பணியின் பலனால் ழகரம் பேச வராமலிருந்த பெருமக்கள், தமிழறிஞர்கள், பேராசிரியர்கள் மற்றும் பலரும் திருந்திய வரலாறு உண்டு. அப்படிப்பட்ட பெருமக்கள் இதைப் படிக்கிறபோது உள்ளுக்குள் கமுக்கமாக இவரைப் பாரட்டுவார்கள், வாழ்த்துவார்கள் என்பது திண்ணம்.
      45 விருதுகள், பட்டங்கள் இதுவரை பல தமிழ் அமைப்புகள் அளித்துப் பாரட்டி உள்ளன. 3 நூல்கள் எழுதியுள்ளார். தினமணி, தினகரன், ஆனந்தவிகடன், ராணி போன்ற 31 தமிழ் தாளிகைகளும் “தி இந்து” ஆங்கில தினத்தாளும் நூற்றுக்கணக்கான தமிழ் ஆர்வலர்களும் ஒவ்வொருவரும் அறியவேண்டிய ஒன்று. உலகிலேயே ஒரு எழுத்துக்கு ஒரு அமைப்பு ஏற்படுத்தித் தொண்டுசெய்பவர் இவர் ஒருவரே என்பதால் இவர் பெயர் கின்னஸ் சாதனையில் இடம் பெற வேண்டும் என்று உவமை கவிஞர் சுரதா அவர்கள் வியந்து போற்றி பாராட்டுவார்கள். ழ என்ற ஒரு எழுத்துக்காக 108 வெண்பாக்களை சுவைபட ‘ழ’கரம் தமிழின் சிகரம்’ என்ற நூலில் சிந்தித்துச் சிந்திய கருத்துக்கள் ‘ழ’கரப் பாவாணர் என்ற விருதையும் பெற்றுத் தந்துள்ளது.
     தமிழுக்காக இதுவரையில் யாரும் நினைத்துப் பார்க்காததையெல்லாம் சொல்லி அதற்காகப் பாடுபடும் இந்த இளந்தமிழறிஞரது பணி வியக்கத்தக்கதாக இருப்பதால், தமிழ் அமைப்புகள் இவரது திறமையைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுகிறோம்.
         எங்கள் ஊர் கல்விச் செம்மலான “ழகரமாமணி, மனிதநேயர்,” கவிஞர் சொ.எழிலரசு, மாநில பொதுச் செயலாளர் அவர்களது கண் துஞ்சா உழைப்பாலும், ழகரப் பயிற்சியாலும் மன்றத்தை மேலும் வலுவூட்டி புகழடையச் செய்ய வேண்டும் என்பதுவே இப்பேரவையின் அவாவாகும்.
இவண்,
சூரியன்
நிறுவனர்/தலைவர்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு