செவ்வாய், 13 ஆகஸ்ட், 2013


தமிழர்களுக்குப் பல உண்மைகளை உணர்த்தும் தமிழாய்வறிஞரின் கருத்துகள் சிலவற்றைப் பார்போம்.

            முதற்குளுக்கு வள்ளுவர் நினைத்து எழுதிய பொருளை, இதுவரை 200 அறிஞர்களுக்கு மேல் உரை தந்தும், ஒருவரும் சரியான பொருளை அளித்தாரில்லை என்பதால், அந்தக்குறையைப் போக்கியுள்ள இவரது புதுமையான குறளுரையை தமிழகத்திற்குத் தேவையானதை அருள்கூர்ந்து படித்துத் தெளிவடையுங்கள், வியப்படையுங்கள், பாராட்டுங்கள்.

1.   குறளய்யன் வாழ்த்து

          1             2                   3         4
       “அகர  முதல எழுத்தெல்லாம் ஆதி
            5                  6              7
        பகவன் முதற்றே உலகு”                      -           (முதல் குறள்)

அண்டத்தின் முதல்வனவன்! ஆதிபக லந்தான்!
            அணைக்கவொரு அம்மையின்றி அப்பனெனக் கொண்டுப்
பிண்டமொன்றைப் பெற்றளித்தான் பெருநெருப்பை மொண்டு!
            பிற்காலில் உயிருருநாள் முதற்றுலகு என்று
தண்ணிலத்தே முதல்மாந்தன் தமிழ்மொழியைக் கண்டு
            தணிச்சிறப்பே எழுத்திலெல்லாம் அகர(ம்)முத லென்றாய்!!
விண்,மண்ணில் அதன்முதற்றை முதற்குறளில் சொன்ன
            வழுவறியா குறளய்யன் கோடியுகம் வாழ்க!

(முதற்குறளில் சொல்லியுள்ள எல்லாமே விண்ணிலும், மண்ணிலும், முதன்மையானவைகள், பகலன் (சூரியன்), உலகு (பூமி), முதல்மாந்தன் தமிழன், முதல் மொழி தமிழ், தமிழின் முதல் எழுத்து ‘அ’ கரம் என யாவும் முதன்மையானவையே என்று முதற்குறளில் சரியான கருத்தளித்த குறளய்யனுக்கு வணக்கம், வாழ்த்துகள் என்பதாக விவரிக்கும் பாங்கே தனியழகு, புதுமை, கற்பனை கலவாதது.)

2.   செம்மொழியா?
நம்மொழி செம்மொழிதான் நம்பிக்கை மாற்றாத
எம்தமிழர் செம்மொ‘ளி’யில் நாணுமாறு – வெம்பி
மறக்கா ‘ழ’கரவொலி மாற்றினால் பேச்சில்
சிறக்குமோ செம்மொழிதான் செப்பு.                                 (பாடல் – 1)

செந்தமி‘ழ்’ என்பதனை ஏன் தமிழா செந்தமி‘லா’ய்.
பைந்தமி‘ழ்’ என்பதனைப் பாழாக்கிப் – பைந்தமி‘ளா’ய்ச்
சொந்தமொழி என்றறிந்தும் சாகுமாறு பேசுகின்ற
உந்தன் அவலம் உணர்.                                                       (பாடல் – 3)

தமி‘ழெமு’த்தைப் பேசத் தெரியாத பாங்கு
தமிழனுக்கே வந்தால் தமிழின் – அமிழ்த ஒலி
பாய்ந்துருகி மாயாதோ? தீயவரின் வாயதுவே
தீய்ந்திடவே வைப்பாய்நீ தீ                                                            (பாடல் – 4)

3.   ழகரச் சீரழிப்பை உலக மயமாக்குவதா?

தேனான தம்தமிழைத் தெம்மாங்குப் பாணியிலே
வீணாக ‘ழ்ழா’நசித்து லா, ளாவைப் பேணிப்
பலநாட்டில் வாழ்தமிழர் பேசிவரும் கேட்டை
உலக மயமாக்கல் ஊறு                                                       (பாடல் – 14)

தமிழ் ழகர ஒலி தமிழர்களால் பாழ்படுத்தப்பட்டு அதனை உலகமயமாக்கி விட்டார்களே என்று ‘ழகரப் பாவாணர்’ எப்படி வருத்தப்படுகிறார் என்பதை, நாம்தமிழர்கள் உணர்ந்து திருந்திட நடவடிக்கை எடுப்போம்.


தமிழ் ழகரப் பேச்சின் சீர்கேட்டை மக்களுக்கும், நாட்டுக்கும் உணர்த்தியவர் – ‘ழகரப் பாவாணர்’ ஒருவரே!

பெண்ணில் பிறமொழியில் இல்லாத பேரின்பம்
எண்ணில் தமிழின் ‘ழ’கரத்தில் – உண்டே!
அரண்டு ளகர லகரமிட்டுப் பேசும்
இரண்டகம் வேண்டாம் இனி.                                                        (பாடல் – 31)

1.   லகர, ளகரப் பேச்சுக்குக் காரண கர்த்தா யார்?

தொல்காப் பியப்பாடல் தொண்ணூற்றைந் தாமாங்கே
சொல்லொலி தோன்ற ‘ர,ழ’ விரண்டும் – மெல்லண்ணம்
நாவருட வந்திடுமாம்; நன்கறியின் பேசுகையில்
‘ரா’வரும், ‘ழா’வராது பார்!                                                              (பாடல் – 59)

நுனிநா மேலண்ணம் அணரி வருடினால் ‘ழ’கர ஒலி பிறக்கும் என்கிறார் தொல்காப்பியப் பெருமான் தனது 95 ஆவது பாடலில். பேசும்போது தமிழர்களால் நுனிநா அண்ணத்தில் வருடுகிறதா, இல்லையா என்பதை உணர முடிவதில்லை.  அதனால்தான் ஒருவரது நாக்கு மேலே வருடிப்பேசும்போது ‘ல’ அல்லது ‘ள’ ஒலியும், வருடாது பேசும்போதுமட்டும் ‘ழ’கர ஒலியும் – ஒரே சமயத்தில் மாற்றி மாற்றி பேசுவார்கள் என்பது தமிழறிஞர் ழகரப் பாவாணரின் சிறப்பானதொரு கண்டுபிடிப்பாகும்.  திருந்துவது நமது பொறுப்பாகும்.

2.    திருத்துவது யார்?

தமிழீர்! எளிபயிற்சி யொன்றைத் தருவேன்
அமிழ்த ழகரஒலி பேச – குமிழ்நாவால்
‘ஷா’பேசக் காற்றைப் புயலென விட்டிடின்
‘ழா’பேசத் தென்றலெனத் தா.                                                                     (பாடல் – 30)

பணிமன்றம் ஏற்படுத்திப் பக்குவமாய் நாக்குப்
பணிய ழகரப் பயிற்சி – அணியமுடன்
வானின்று போற்றும் வளமழையாய்த் தந்திடினும்
ஏனென்று கேட்பாரோ ஈங்கு.                                                                     (பாடல் – 46)

பன்னூறு சீர்த்திருத்தம் பாரதியும் சொன்னானும்
சொன்னதில்லை, ‘ழா’ வொலி மாற்றுவர்க்கு! – என்னவோ
மாக்கவியே! ‘ளா’ வொலிநீ கண்டியாது போயிடினும்,
போக்கிடுவேன் நானந்தப் போக்கு.                                                           (பாடல் – 78)

இவர், உலக மகாகவி பாரதி விட்டுச் சென்ற ஒரு காரியத்தை, தானே வரித்துக்கொண்டு வாழ்நாள் குறிக்கோளாக செயல்பட்டுத் திருத்துவது பலன் கருதாத பெரும் செயல் எனலாம்.

முத்தான நம்தமிழே மூவெழத்தின் அச்சாணி
சத்தான ‘ழா,லா,ளா’ சேர்த்தழிப்பர் – மெத்த
கனித்தமிழைச் சீரழிப்போர் கண்திறப்பேன்! ஓயேன்!
இனியுறக்கம் இல்லை எனக்கு.                                                      (பாடல் – 101)

‘ழகர ஞாயிறு’ அ. தேவநாதப் பாவாணர் அவர்கள் எழுதிய “ழகரம் தமிழின் சிகரம்” என்ற வெண்பா நூலைப் படித்தால் அவர் 108 வெண்பாக்களில் ழகரம் என்ற ஒரு எழுத்தின் சிறப்பைப் போற்றி பாராட்டி தமிழர்களின் நாவைத் திருத்துவதற்கு எப்படி யெல்லாம் சிந்தித்து கெஞ்சியும், கொஞ்சியும், விஞ்சியும் பாடல்களைப் புனைந்துள்ளார் என்பதை அறியலாம்.

பேரறிஞரா தமிழ்நாட்டின் பெயரைத் தவறாகச்
சூட்டியுள்ளார்? நம்ப முடியவில்லையே!

(TAMIL NADU) ‘டமில்நடு’ என்றே வழுவிவரும் சொல்லை
(Thamizh Naadu) ‘தமிழ்நாடு’ என்று படிப்பது ஞாயமன்று!
ஞாயமில்லை என்று எவரேனும் என்னையன்றி
வாயெடுத்துக் கேட்டதுண்டா? கூறு!                                            (பாடல் -1) II

ஆயிரம் ஆண்டுகளுக்குப்பின் பேரறிஞர் அண்ணா அவர்கள்தான் இவ்விதம் ‘டமில்நடு’ என்று பெயர் சூட்டினார் என்று சொன்னால் யாரும் நம்பமாட்டார்கள்.  ஏனெனில் இது உண்மை என்பதால் ஆகும். திருவள்ளுவரின் குறள்கள் ‘இளிவு’ பற்றிய பாடல் 12-11ல் கீழே சொல்லியுள்ளதை இதற்கு ஒப்பிட்டுப் பார்க்கவும்.
‘அ’ என்ற தற்போதுள்ள வரிவடிவத்திலிருந்தா முந்தைய காலத் எழுத்துருக்களும் உருவாயின? அது எப்படி முடியும்?

‘அ’ஒலிப்பே எல்லா எழுத்தொலிக்கும் ஆதாரம்
‘அ’ உருவே மற்றலிபி உண்டாக வந்தஒன்று
என்றுபடம் போட்டுபா.வே மாணிக்கம் நூல்தந்து
வென்றதாகக் காட்டியது வீம்பு.                                                     (பாடல் – 3) 11

கனி இருக்கக் காயைத் தேடி இருப்பாரா
அய்யன் திருவள்ளுவர்?
ஞானமுடன் பாடிய வான்புகழ் வள்ளுவரும்
தேனாய்த் திருக்குறளைப் பாயபிட்டு – ஊனமுடன்
ஒன்பதில் ஏனோ இ’ழி’வை இ’ளி’வென்னும்
சொன்மயங்கச் சொல்லியது ஊறு.                                     (பாடல் – 12) 11
(குறள்கள் 464, 654, 970, 971, 988, 1044, 1066, 1288, 1298)

“தமிழ் மொழி அகாதமி” என்பதைத் தமிழிலேயே
முழுதுமாக பெயரைச் சூட்டமுடியதா?

          “தமிழ் மொழி அகாதெமி” என்பதில் இருமொழிகள் கலந்தொலிப்பதால், அதனைத் தவிர்த்திட – நன்கு ஆராய்ந்து “தமிழ்மொழி (க்கல்வி) அவையம்” என்பது சிறப்பாகுமா என்று சிந்தியுங்கள்.

CONSTITUTION என்பது வேறு, POLITICS என்பது வேறு :
இரண்டும் எப்படி ஒன்றாகும்?

            “The Constitution of India 1950” : இதனைப் பெரும் பட்டப்படிப்பு படித்தவர்கள்கூட எப்படியெல்லாம் சரியாகச் சிந்திக்காமல் மொழிப்பெயர்ப்பில் சிதைக்கிறார்கள் என்பதைப் பாருங்கள்.  “இந்திய அரசியலமைப்புச் சட்டம் 1950” என்று சட்டம் கற்ற மேதாவிகளும், அரசியல் வானில் புகழின் உச்சியில் மின்னுபவர்களும்கூட கையாளும் மொழி பெயர்ப்பு இது என்றாலும், ‘ழகர ஞாயிறு’ மொழி பெயர்ப்பு  செய்து, பயன்படுத்துவது ‘இந்திய அரசமைப்புச் சட்டம் 1950” என்பதுவேயாம்.  அரசியல் அமைப்பு என்பது வேறு, அரசமைப்பு என்பது வேறு.  இந்திய அரசை அமைக்கும் முறையை விளக்கி நிர்ணயம் செய்து அளித்துள்ளது என்பதுதான் அதன் பொருள் எனலாம்.  Politics என்றால் தான் அரசியல் என்று பொருள் வரும். அரசியல் பண்ணுவது எப்படி என்பதைப் பற்றி அதில் விளக்கப்படவில்லை.  எந்த அரசியல் கட்சியின் பெயரும் அதில் இடம் பெறவுமில்லை.  எனவே அதை இந்திய அரசியலமைப்புச் சட்டம் 1950 என்று மொழி பெயர்ப்புச் செய்து பேசுவது, எழுதுவது என்பதெல்லாம் பெரும் பிழை ஆகும். சிலர் இந்திய அரசியல் சாசனம் என்றும் இன்னும் சிலர் இந்திய அரசியல் நிர்ணயச் சட்டம் 1950 என்றும் பயன்படுத்துகிறார்கள். ‘இந்திய அரசமைப்புச் சட்டம் 1950’ என்று எழுதுவதே  சரியானது. சிந்தியுங்கள், சீரபடுத்துங்கள்.

தமிழ்நாட்டில் யாரெல்லாம் ‘ழ’கரமிட்டுத் தமிழைச்,
சரியாகப் பேசுகிறார்கள்?

வேதகுலர், தொண்டை நடுநாட்டார் பேசாரே
சேதமிட்டு என்றுமே செந்தமிழை! – “மீதமுள்ள
நீண்ட நிலப்பகுதி வாழ்மக்கள் பேசுதமி’ல்’
வேண்டா” எனச் சொல்லி வேண்டு.                                   (பாடல் – 10)

சென்னையில் பல்லவர் நாட்டின் சுவைகுன்றா
மென்மை ழகரமொழிப் பேச்சையும் – புன்மைக்
குணங்கொண்டோர் பொய்யாய்க் குறைசொல்லித் துள்ளி
அணங்கொப்ப ஆடுவதோ ஆர்த்து.                                               (பாடல் - )

யார் தமிழர்?

தமிழர்கள் என்போர் தவறுதலாய்ப் பேசின்
நிமிராத் தலைகுனிவே நேரும்! நெறியுணர்!
ஆர்த்தெழு! அந்தோ! அ‘ள’குதமி’ல்’ பேசுகின்ற
மூர்க்கத்தை முற்றும் மற.                                                    (பாடல் – 38)

உலகெலாம் ஆய்ந்துவந்தேன் உண்மை! தமிழர்
பலபேர் ழகர, ளகர, லகரமிட்டுப்
பேசுதல்போல் கண்டே  னிலை!அய்யோ! இத்தகு
மாசுநிலை மாயுமாறு மாற்று.                                                         (பாடல் – 44)

நானும் தினமும் நயந்தே அழைக்கின்றேன்
நன்மை பயக்குமென் ‘ழ்ழா’பயிற்சி – என்றதனால்
கண்ணுறுத்து மாறென்னைக் காணாதீர், உண்மையில் என்
எண்ணம் நலமென் றியம்பு.                                                            (பாடல் – 45)

பணிமன்றம் ஏற்படுத்திப் பக்குவமாய் நாக்குப்
பணிய ழகரப் பயிற்சி – அணியமுடன்
வானின்று போற்றும் வளமழையாய்த் தந்திடினும்
ஏனென்று கேட்பாரோ ஈங்கு.                                                         (பாடல் – 46)

விதைநெல் ழகரத்தை விற்கும் தமிழர்
சிதைக்கும் ‘ல,ள’விதைத் துண்பார் – வதையும்நா
திண்ணமாய் அண்ணம் வருடாமல் ‘ழ்ழா’பேசி,
முண்டமென்ற பட்டத்தை மாற்று.                                     (பாடல் – 47)

காலம் இதுவரைக்கும் காட்டாக் கருவொன்றை
ஞாலத் தமிழறிஞர், மூல’ழ’ – கீலமுற்றுப்
பஞ்சத்துள் மூழ்கியதைப் பாரறியச் செய்தவரை
நெஞ்சுருக வாழ்த்தல் நெறி.                                                            (பாடல் – 50)

தமிழரின் மானம்

வேண்டும் எழுத்தொலி வேண்டாமோ, இன்னொலியைத்
தூண்டும் ழகரம் துரத்துவதோ! – பூண்டொழுகார்
தானம் செயலாமோ? தாளம் தவறாது
மானம் பெரிதாய் மதி.                                                                     (பாடல் – 61)

மானம் பெரிதாம் மனத்தை உடையோர்க்கு,
வானம் விரிவுற்று வற்றிடுமோ? - கானம்
பிறழ்ன்று தமிழர் பிதற்றுவது ஒப்போம்
பிறழா தமிழ்ழகரம் பேசு.                                                     (பாடல் – 65)

களஆய்வு செய்தேன், உளம்நொந்தேன் உண்மை!
இளம்பிஞ்சும், மூத்தொரும் பேசும் – ப ‘ள’கு
தமி ‘லு’ம் தமி’ளு’ம், அருவருப் பாக
அமிலமெனத் தீய்த்தல் அறி.                                                          (பாடல் – 66)

இழிவின்றிப் பேசுவதே பேச்சாகும்! மாற்றி
இளிவென்றால் தாங்காப் பிழையாம் – விழிப்புடன்
தேனினிப்பு ‘ழா’காரம் தாழாமல் என்றென்றும்
வானினிக்கப் பேசுவதே பேச்சு.                                          (பாடல் – 69)

நாவில் கலப்புமொழி நற்கல்வி வேற்றுமொழி
கோவில் அரங்கெல்லாம் செத்தமொழி – பூவிழியே
சீரின்றிப் பேச்சொலியில் ‘ழா,லா,ளா’ ஒன்றிணைக்கின்
காரியுமிழ்! நம்மொழியைக் கா!                                                      (பாடல் – 74)

பாண்டியன் தண்டமிழைப் பாங்குடனே ஓம்பவில்லை
வேண்டிநின்ற சான்றோர்க்கு வாரியிட்டுத் – தாண்டியே
போனான் புகழ்விரும்பி; பைந்’தமிழ்’ கெட்டதுவே
ஆனான, பைந் ‘தமில்’ என்று.                                                                     (பாடல் – 93)

ஒப்பிலாக் கல்விமான் என்பார் உயர்நிலையில்
தப்பில் மிதப்பார் ‘தமிள்’ பேசி – மப்பில்
உளறிடுவார் சென்னைவந்தும்! செந்தமிழைத் தாழ்த்தும்
களர்நாவர் கர்வத்தைக் காண்.                                                                   (பாடல் – 99)

தொடர்புக்குப் பேசி எண்:                9380838733 மாநிலத் தலைவர்
                                                        9095902217 மாநிலச் செயலாளர்
                                                        9434285769 அந்தமான் கிளை மன்றத் தலைவர்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு