சனி, 14 ஜனவரி, 2017









21-8-2016 இல் “தமிழ் ‘ழ’கர நூலகம்” தொடக்கவிழா.
பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கமும் தமிழ் ‘ழ’கரப்பணிமன்றமும்  இணந்து  மரக்கன்றுகள் நடும் விழா மற்றும் “தமிழ் ‘ழ’கர நூலகம்” தொடக்கவிழா   பாவூர்சத்திரம் கடையம் சாலையில் உள்ள ‘வே.ஆறுமுகநாடார் நகரில்’ வே.ஆறுமுகநாடார் வளாகத்தில் 21-8-2016  ஞாயிறு காலை 10 மணிக்கு சிறப்பாக நடைபெற்றது. பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கத்தின் மண்டலத் தலைவர் அரிமா கே.சக்திவேல் அவர்கள் நூலகத்துக்கு முன்பு  மரக்கன்றுகள் நட்டபின் விழா அரங்கில் விழா தொடங்கியது.
கல்லூரணி பேரூராட்சித் தலைவர் அரிமா எம்.இராமசாமி (எ) தமிழ்செல்வன் அவர்கள் தலைமை தலைமை தாங்கினார்கள். பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கத்தின் தலைவர் சி.முருகன் அவர்கள் முன்னிலை வகித்தார்கள். தமிழ்த்தாய் வாழ்த்தினை திருமதி த.கலாவதி ஓவிய ஆசிரியை அவர்கள் பாட விழா தொடங்கியது. பாவூர்சத்திரம் தமிழ் ‘ழ’கர நூலகத்தின் பொறுப்பாளர் அரிமா த.அந்தமான் அருண் அவர்கள் அனைவரையும் வரவேற்றார்கள்.
கீழப்பாவூர் தமிழ் இலக்கிய மன்றத் தலைவர், இலக்கியக் காவலர் திரு.எஸ்.செல்வன் அவர்கள்  தமிழ் ‘ழ’கர நூலகத்தை  தொடங்கி வைத்து பேசினார்கள். நிகழ்ச்சியை கண்தான விழிப்புணர்வுக்குழு நிறுவனரும் கண்தான மாவட்டத்தலைவ்ருமான கே.ஆர்.பி.இளங்கோ அவர்கள் சிறப்பாக தொகுத்து வழங்கினார்கள்.
நிகழ்ச்சியில் கீழப்பாவூரைச் சேர்ந்த பணிநிறவிவு பெற்ற தலைமை ஆசிரியர் திரு.துரைராஜ், கீழப்பாவூர் தந்தை பெரியார் குருதி மற்றும் விழிக்கொடைக் கழக நிறுவனர் அய்.இராமச்சந்திரன், கீழப்பாவூர் பேரூரட்சித் தலைவர் அரிமா பொன்.அறிவழகன், ஆசிரியர் பாலசுப்பிரமணியசிங், பாவூர்சத்திரம் த.பி.அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் ஓவியர் தமிழன்,ஆகியோர் சிறப்பாகப் பேசினார்கள்.

விழாவிற்கு கீழப்பாவூர் பேரூராட்சித் தலைவர் அரிமா பொன் அறிவழகன், அரிமா. முருககிங்க்ஸ்டன், அரிமா பி.இரவீந்திரன், அரிமா வி.சுப்பையா பாண்டியன், அரிமா எஸ்.கே.முருகன், திருமதி சௌந்தரா அந்தமான் அருண், வள்ளுவர்நேசன் இரா.சந்திரன், ஊத்துமலை காவல்த்துறை துணை ஆய்வாளர் திரு து.சண்முகராஜன், திரு ச,மன்மததுரை, திரு.அய்யன், ஆகியோர் கலந்து கொண்டனர். திருமதி த.கலாவதி அவர்கள் பிறந்தநாள் வாழ்த்துப் பாடலை தமிழில் எப்படி பாடுவது என்று இசையோடு பாடிக் காட்டினார்கள். இறுதியில் அரிமா ஆர்.கலைச்செல்வன் அவர்கள் நன்றி கூற விழா நிறைவடைந்தது.